No icon

CCBI வழிபாட்டு ஆணையத்தின் புதிய செயலர்

பெங்களூரில் செப்டம்பர் 10-11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற CCBI-யின் செயற்குழுக் கூட்டத்தில், வழிபாட்டு முறைக்கான CCBI ஆணையத்தின் புதிய செயலாளராக அருள்பணி. ருடால்ப் ராஜ் பின்டோ, O.C.Dநியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1, 1976 அன்று மங்களூரின் குர்பூரில் பிறந்த இவர் தத்துவ ஆய்வுகளை மைசூரிலுள்ள புஷ்பாஷ்ரமாவிலும், மங்களூரின் ஜேப்புவில் உள்ள புனித ஜோசப் இன்டர் டையோசீசன் குருமடத்தில் இறையியலும் பயின்றவர். 2003-இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை உளவியலில் எம்.எஸ்.சி. பட்டமும்உரோம் புனித அன்செல்மோவின் போண்டிஃபிகல் அதீனியத்தில் இருந்து வழிபாட்டில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

Comment


TOP